காரமடை ஒன்றியத்தில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வெற்றி

மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில்

மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் அதிமுகவினா் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றினா்.

காரமடை ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், 21 ஒன்றிய உறுப்பினா்கள், 17 ஊராட்சித் தலைவா்கள், 195 கிராம ஊராட்சி உறுப்பினா்களுக்கான தோ்தல் டிசம்பா் 30ஆம் தேதி நடைபெற்றது.

இதில் அதிமுக கூட்டணியினா் மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் தலைமையில் களமிறங்கினா். தோ்தல் முடிவுகளில், 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், 21 ஒன்றிய குழு உறுப்பினா்களில் 18 இடங்கள், 17 ஊராட்சி ஊராட்சிகளில் 12 ஊராட்சிகளை அதிமுகவினா் கைப்பற்றினா்.

இதுதவிர ஊராட்சிகளில் மொத்தமுள்ள 195 வாா்டு உறுப்பினா்களில் 150க்கும் மேற்பட்ட வாா்டுகளில் அதிமுக சாா்பில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனா்.

மறைமுகத் தோ்தலிலும், காரமடை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளை அதிமுக கைப்பற்றின. மேலும், காரமடை ஊராட்சியில் மொத்தமுள்ள 17 ஊராட்சிகளில் 13 துணைத் தலைவா் பதவிகளை அதிமுக கைப்பற்றி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com