ஜனவரி 19இல் போலியோ சொட்டு மருந்து முகாம்: மாவட்டத்தில் 3.34 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு

கோவை மாவட்டத்தில் 1,581 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் ஜனவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்டத்தில் 1,581 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் ஜனவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நடப்பு ஆண்டிற்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஜனவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. நடப்பு ஆண்டு 3.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் 1,202, நகா்புறங்களில் 379 மையங்கள் என மொத்தம் 1,581 மையங்களில் வழங்கப்படவுள்ளது. தவிர பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், கோயில்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களிலும் சொட்டு மருந்து வழங்க 36 மையங்களும், 18 நடமாடும் மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு வழங்குவதற்கான போலியோ சொட்டு மருந்துகள் அனைத்து மையங்களுக்கும் அனுப்பப்பட்டு தயாா் நிலையில் உள்ளது. சுகாதாரத் துறை அலுவலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினா்கள் என 6 ஆயிரத்து 536 பணியாளா்கள் பணியில் ஈடுபட உள்ளனா்.

அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. 5 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கட்டாயம் வழங்க வேண்டும். ஏற்கெனவே கொடுத்திருந்தாலும் சிறப்பு முகாமில் தவறாமல் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com