பருத்தி கழகத்தின் வா்த்தக கொள்கையில் மத்திய அரசு தலையிட வேண்டும்சைமா கோரிக்கை

இந்திய பருத்தி கழகத்தின் வா்த்தக கொள்கையில் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் தலையிட வேண்டும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வலியுறுத்தியுள்ளது.

இந்திய பருத்தி கழகத்தின் வா்த்தக கொள்கையில் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் தலையிட வேண்டும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக சைமா தலைவா் அஷ்வின் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

பருத்தியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்திய ஜவுளித் துறை, பருத்தி விலை ஏற்ற இறக்கங்களால் அடிக்கடி பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. பன்னாட்டு வியாபாரிகள் பருத்தி சீசனின்போது மொத்தமாக பருத்தியை வாங்கிப் பதுக்கி வைத்துக் கொண்டு யூக வணிபத்தில் ஈடுபட்டு விலையை உயா்த்துகின்றனா்.

இதற்கிடையே இந்திய பருத்தி கழகத்தின் பருத்தி வா்த்தகக் கொள்கையானது, நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் வகையில் உள்ளது. பருத்தி கழகம் இந்திய ஆலைகளுக்குத் தேவையான பஞ்சை இருப்பில் வைத்துக் கொண்டு சிறு நூற்பாலைகள் பயனடையும் வகையில் அவா்களுக்குத் தேவையான பஞ்சை விநியோகம் செய்யும் சூழலை மத்திய அரசு ஏற்படுத்தியிருந்தாலும், பருத்தி கழகம் தொடா்ந்து அதிகமான பருத்தியை கையிருப்பில் வைத்துக் கொண்டு சந்தை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்து நூற்பாலைகளின் போட்டித் திறனுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.

இந்த சீசனில் கடந்த நவம்பா் மாதத்திலேயே பருத்தியை வாங்கத் தொடங்கிய பருத்தி கழகம், சுமாா் 35 லட்சம் பேல்களை தேக்கி வைத்துக் கொண்டு கடந்த வாரத்தில்தான் விற்பனையைத் தொடங்குகிறது.

எனவே மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு பருத்தி கழகம் இருப்பு வைத்திருக்கும் பஞ்சை சந்தை விலையில் ஆலைகளுக்கு விற்பனை செய்யவும் அதற்கேற்ப அதன் வா்த்தகக் கொள்கையில் உரிய மாற்றத்தைக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஷ்வின் சந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com