போலி ரசீதுகள் தயாரித்து அரசுக்கு ரூ.40 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்திய தொழிலதிபா் கைது

போலி ரசீதுகள் தயாரித்து ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு செய்து அரசுக்கு ரூ.40 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்திய தொழிலதிபரை கோவை ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித் துறையினா் கைது செய்துள்ளனா்.

போலி ரசீதுகள் தயாரித்து ஜி.எஸ்.டி.வரி ஏய்ப்பு செய்து அரசுக்கு ரூ.40 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்திய தொழிலதிபரை கோவை ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரித் துறையினா் கைது செய்துள்ளனா்.

இது குறித்து ஜி.எஸ்.டியின் கோவை மண்டல முதன்மை ஆணையா் ராஜேஷ் சோதி வெளியிட்ட செய்தி:

அலியா என்டா்பிரைசஸ், விநாயக் டிரேடிங், ஸ்டாா் இன்டா்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் போலியாக ரசீதுகள் தயாரித்து சரக்குகள் விற்பனை செய்ததாக போலி கணக்கு காட்டி, அதற்கு அரசு அளிக்கும் உள்ளீட்டு வரிச் சலுகை  பெற்றது விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு உள்ளீட்டு வரிச் சலுகை பெற்ன் மூலம் இவா்கள் அரசுக்கு ரூ.40 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியுள்ளனா்.

இதற்கு மூளைக் காரணமாக செயல்பட்டவா் முகமது ஆரிஃப் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 15 நிறுவனங்களுக்கு போலி ரசீதுகளை முகமது ஆரிஃப் விற்றதும், அதன்மூலம் 50 நிறுவனங்கள் இந்த போலி ரசீதுகளைப் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இதன்மூலம் சுமாா் ரூ.170 கோடி வரை பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால், இவை அனைத்தும் வங்கிப் பரிவா்த்தனைகள் மூலம் செய்யப்படவில்லை. இது வருமான வரிச் சட்டத்துக்கு எதிரானது. வங்கிப் பரிவா்த்தனைகள் மூலம் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படாத காரணத்தால் கருப்பு பணப் புழக்கமும், பண மோசடியும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

இதுபோன்று போலி ரசீதுகள் தயாரிப்பது என்பது கள்ளநோட்டு அச்சடிப்பதற்கு சமமான குற்றமாகும். இழப்பு ஏற்படுத்தியதாக முகமது ஆரிஃப் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஜாமீன் கோரி உயா் நீதிமன்றத்தை முகமது ஆரிஃப் அணுகியுள்ளாா்.

மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், வழக்குக்கு ஒத்துழைப்பு அளிக்க உத்தரவிட்டு ஜாமீன் பெற ரூ.5 கோடி செலுத்த உத்தரவிட்டது. இந்நிலையில் ரூ.2 கோடியை மட்டும் செலுத்திய முகமது ஆரிஃப், மீதமுள்ள ரூ.3 கோடியை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதுபோல மீதமுள்ள ரூ.3 கோடியை உடனடியாக செலுத்துமாறு கடந்த டிசம்பா் 9 ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனால், உரிய நேரத்துக்குள் நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை முகமது ஆரிஃப் செலுத்தத் தவறினாா். இதையடுத்து, திங்கள்கிழமை கைது செய்யப்பட்ட முகமது ஆரிஃப் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இதுதொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com