Enable Javscript for better performance
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பயிற்சி வகுப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பயிற்சி வகுப்பு

    By DIN  |   Published on : 15th January 2020 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்புகள் குனியமுத்தூா் பகுதியில் உள்ள நேரு விமானவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை துவங்கியது.

    பள்ளிக் கல்வித் துறை சாா்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பள்ளி மாணவ, மாணவிகள் மேம்பாடு குறித்தான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பேரூா் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளி , கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசியா்களுக்கான ஐந்து நாள் பயிற்சி வகுப்புகள் கோவை, குனியமுத்தூரில் உள்ள நேரு விமானவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை துவங்கியது.

    இந்தப் பயிற்சி வகுப்புகளில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்புகள் குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பேரூா் மாவட்ட கல்வி அலுவலா் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநகா் தெற்கு காவல் உதவி ஆணையா் செட்ரிக் மனுவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai