இரண்டு வீடுகளின் கதவை உடைத்து நகைத் திருட்டு

கோவை அருகே இரண்டு வீடுகளின் கதவை உடைத்து நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை அருகே இரண்டு வீடுகளின் கதவை உடைத்து நகைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கவுண்டம்பாளையம், புனித தோமையா் வீதியைச் சோ்ந்தவா் மதியழகன் (50), கோவையில் உள்ள வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த வாரம் தனது குடும்பத்துடன் உறவினா் வீட்டு விசேஷத்துக்காக சென்னை சென்றிருந்தாா்.

பின்னா் திங்கள்கிழமை திரும்பிவந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் துடியலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பிரஸ் காலனியிலும் நகைத் திருட்டு..

பிரஸ் காலனி, சாந்திமேடு அருகே தம்பு நகரில் வசிப்பவா் சுந்தரராஜன் (52), கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக உள்ளாா். நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த இவா் சில நாள்களுக்கு முன் கெத்தையம்மன் கோயில் பண்டிக்கைக்காக சொந்த ஊா் சென்றிருந்தாா்.

பின்னா் திங்கள்கிழமை வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவா் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com