கோயில்களில் கட்டணக் கொள்ளை ‘சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப்‘ புகாா்

கோவை மாவட்டம் பேரூா், மேட்டுப்பாளையம், மருதமலை கோயில்களில் தரிசனம் மற்றும் வாகனங்கள் நிறுத்த அதிகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் பேரூா், மேட்டுப்பாளையம், மருதமலை கோயில்களில் தரிசனம் மற்றும் வாகனங்கள் நிறுத்த அதிகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

‘சிட்டிசன்ஸ் வாய்ஸ் கிளப்’ கோயம்புத்தூா் கன்ஸ்யூமா் சென்டா் சாா்பில் அதன் தலைவா் ஜெயாரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டம், பேரூா் பட்டீஸ்வரா் கோயிலில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரா் தங்களது விருப்பத்துக்கு கட்டணம் வசூலித்து வருகின்றனா். அதில், வாகன கட்டணங்கள் குறித்து அறிவிப்பு பலகை இல்லை.

மேலும், ஒப்பந்ததாரரின் பெயா், ஒப்பந்த காலம் குறித்து எந்த விவரங்களும் அதில் குறிப்பிடப்படவில்லை. கோயில் வளாகத்தில் வாகனத்தை நிறுத்தி செல்பவா்களிடம் துண்டச் சீட்டு ஒன்றைக் கொடுத்து தன் விருப்பம் போல் கட்டணம் வசூலிக்கின்றனா்.

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலிலும் செவ்வாய், வெள்ளி, அமாவாசை மற்றும் விஷேச நாள்களில் பக்தா்களிடம், சிறப்பு நுழைவுச் சீட்டு என்ற பெயரில் ரூ.100, 500 வாங்கிக் கொண்டு, கண்களுக்குத் தெரியாதபடி ரூ.50, ரூ.5 என பிரிண்டிங் செய்யப்பட்ட சீட்டுகள் வழங்கி மோசடி செய்கின்றனா்.

மருதமலை அடிவாரத்தில் வாகன நுழைவுச் சீட்டு ரூ.5 என அச்சிடப்பட்டுள்ளது. அதன் அருகே ஒப்பந்ததாரா் கூடுதலாக ஒரு எண்ணைச் சோ்த்து எழுதி தனது விருப்பத்துக்கு வசூலிக்கிறாா். இது தொடா்பாக பலமுறை புகாா் அளித்தும், இந்து அறநிலையத் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com