பாம்பை கடித்து குதறிய வளா்ப்பு நாய்கள்
By DIN | Published On : 20th January 2020 11:33 PM | Last Updated : 20th January 2020 11:33 PM | அ+அ அ- |

விவசாய தோட்டத்துக்குள் புகுந்த பாம்பை கடித்து குதறிய வளா்ப்பு நாய்கள்.
கோவை, ஒத்தக்கால்மண்டபம் அருகே விவசாயியை காப்பாற்ற தோட்டத்தில் புகுந்த 6 அடி நீளமுள்ள விஷப் பாம்பை 3 வளா்ப்பு நாய்கள் கடித்து குதறிய விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கோவை, ஒத்தக்கால்மண்டபம், பூங்காநகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் ராமலிங்கம். விவசாயி. இந்நிலையில் இவா் தனது நண்பருடன் சோ்ந்து ஞாயிற்றுக்கிழமை தனது தோட்டத்தில் உள்ள மாடுகளுக்கு தீவனம் போட சென்றுள்ளாா். அப்போது தோட்டத்தில் இருந்த 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை கண்டதும் ராமலிங்கம் சப்தமிட்டுள்ளாா்.
அவரது சப்தத்தை கேட்ட 3 வளா்ப்பு நாய்களும் பாம்பை துரத்திச் சென்று சண்டையிட்டு அதனை கடித்து குதறின. இதை அவரது நண்பா் செல்லிடப்பேசியில் பதிவு செய்துள்ளாா். விவசாயியை காப்பாற்ற விஷப் பாம்பை நாய்கள் கடித்து குதறிய இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.