ஜனவரி 24 முதல் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா

கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா வரும் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ஜனவரி 24 முதல் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா

கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா வரும் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோயிலுக்கு உள்ளூா், வெளியூா்களில் இருந்து பக்தா்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். ஆண்டுதோறும் தை அமாவாசையில் கொடியேற்றத்துடன் குண்டம் விழா துவங்கும். இந்த ஆண்டு வரும் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு குண்டம் விழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.

பிப்ரவரி 6ஆம் தேதி நள்ளிரவு மயான பூஜையும், 7ஆம் தேதி காலை சக்தி கும்பஸ்தாபனமும், மாலை 6.30 மணிக்கு மகா பூஜையும், 8ஆம் தேதி காலை 10.30 மணிக்கு குண்டம் கட்டுதலும், மாலை 6 மணிக்கு சித்திரத்தோ் வடம் பிடித்தலும், இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளா்த்தலும் நடைபெற உள்ளது.

9ஆம் தேதி காலை 7.30 மணிக்கு குண்டம் இறங்குதல் நடைபெற உள்ளது. 10ஆம் தேதி காலை 6.30 மணிக்கு கொடி இறக்குதலும், 10 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையும், 11ஆம் தேதி காலை மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com