முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
அன்னூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவியேற்பு
By DIN | Published On : 27th January 2020 11:33 PM | Last Updated : 27th January 2020 11:33 PM | அ+அ அ- |

அன்னூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அம்பாள் எஸ்.ஏ.பழனிசாமி .
அன்னூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக அம்பாள் எஸ்.ஏ.பழனிசாமி திங்கள்கிழமை பொறுப்பேற்று கொண்டாா்.
அன்னூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் குழந்தைராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் அமுல் கந்தசாமி, கரியாம்பாளையம் கூட்டுறவு சங்கத் தலைவா் ஓ.எஸ்.சாய்செந்தில், அன்னூா் நகர அதிமுக செயலாளா் செளகத் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சியில் அம்பாள் துளசி பப்ளிக் பள்ளித் தாளாளா் எஸ்.ஏ.நந்தகுமாா், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் கீதா பழனிசாமி, ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் சரவணன், தாளத்துரை செந்தில், அல்லப்பாளையம் வெங்கிடுபதி, பக்தராஜ், அம்பாள் சுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.