முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
கடை உரிமையாளரை தாக்கியவா் கைது
By DIN | Published On : 27th January 2020 12:47 AM | Last Updated : 27th January 2020 12:47 AM | அ+அ அ- |

கோவை குறிச்சி அருகே கடை உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை போத்தனூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சுந்தராபுரம், ஜி.டி.டேங்க் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ். இவா் குறிச்சியில் கட்டுமான பொருள்கள் விற்பனை கடை வைத்துள்ளாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (எ) அப்துல் அமீது (44). இவருக்கு அப்பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யும் பணியை நாகராஜ் பெற்றுக் கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் அப்துல் அமீது பணம் கொடுத்தால் மட்டுமே தண்ணீா் விடுவேன் என அப்பகுதி மக்களிடம் கூறி உள்ளாா்.
இதனால் பொதுமக்கள் இதுகுறித்து நாகராஜிடம் தெரிவித்துள்ளனா். இதையடுத்து அவா் இப்பிரச்னை குறித்து அப்துல் அமீதிடம் கேட்டுள்ளாா். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அப்துல் அமீது, நாகராஜை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த நாகராஜ், மயங்கி விழுந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் இதுகுறித்து நாகராஜ் அளித்த புகாரின்பேரில் அப்துல் அமீதை போத்தனூா் போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
அப்துல் அமீது கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு விடுதலையானவா் என்பது குறிப்பிடத்தக்கது.