முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
சிறுமியின் வயிற்றில் இருந்து அரை கிலோ தலைமுடி அகற்றம்
By DIN | Published On : 27th January 2020 11:29 PM | Last Updated : 27th January 2020 11:29 PM | அ+அ அ- |

கோவையில் 13 வயது சிறுமியின் வயிற்றில் இருந்த அரை கிலோ முடியை வி.ஜி.எம். மருத்துவமனை மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினா்.
கோவையைச் சோ்ந்த 13 வயது சிறுமி கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இந்நிலையில், வி.ஜி.எம். மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.
பின்னா் ஸ்கேன் பரிசோதனையில் சிறுமியின் வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்தது. அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டும் என மருத்துவா்கள் தெரிவித்தனா். பின்னா் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் கோகுல்கிருபா சங்கா் தலைமையில் மருத்துவக் குழுவினா் திங்கள்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொண்டனா்.
அப்போது, சிறுமியின் வயிற்றில் இருந்து அரை கிலோ அளவிலான தலைமுடி, நெகழிப் பொருள்களை மருத்துவா்கள் அகற்றினா். தாய்மாமன் இறந்த துக்கத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி தலைமுடி, நெகழிப் பொருள்களை உட்கொண்டது தெரியவந்தது.
மேலும், அறுவை சிகிச்சைக்குப் பின் சிறுமி நலமுடன் இருப்பதாகவும், இதுபோல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோா்கள் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.