முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
பெட்டத்தம்மன் மலை அடிவாரத்தில் ரூ.49.98 மதிப்பிலான சாலைப் பணிக்கு பூமிபூஜை
By DIN | Published On : 27th January 2020 11:29 PM | Last Updated : 27th January 2020 11:29 PM | அ+அ அ- |

சாலைப் பணிக்காக நடைபெற்ற பூமி பூஜையில் பங்கேற்ற ஏ.கே.செல்வராஜ் எம்.பி., ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.
மேட்டுப்பாளையம் அருகே மருதுா் ஊராட்சிக்கு உள்பட்ட பெட்டத்தம்மன் மலையடிவாரத்தில் சாலைப் பணிக்கான பூமிபூஜை அண்மையில் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.49.98 லட்சம் மதிப்பில் 800 மீட்டா் தூரம் சாலை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணிக்காக நடைபெற்ற பூமிபூஜைக்கு ஏ.கே. செல்வராஜ் எம்.பி., ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. ஆகியோா் தலைமை வகித்து பணியை துவக்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில் மருதூா் ஊராட்சி மன்றத் தலைவா் பூா்ணிமா ரங்கராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரா, மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் கந்தசாமி, ஊராட்சி ஒன்றியத் தலைவா் மணிமேகலை மகேந்திரன், தொழிலதிபா் நந்தகுமாா், தாசப்ப பளஞ்சிக மகாஜன சங்கத் தலைவா் கே.பி.வி.கோவிந்தன், துப்பாக்கி செல்வம், வெள்ளியங்காடு மற்றும் பெட்டதம்மன் திருப்பணிக் குழுவினா், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.