முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
பொதுத் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th January 2020 11:28 PM | Last Updated : 27th January 2020 11:28 PM | அ+அ அ- |

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கான பொதுத் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சாா்பில் கோவை தெற்கு வட்டாச்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியாா் திராவிடா் கழக பொதுச்செயலா் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த ஆா்ப்பாட்டத்தில் திராவிடா் விடுதலைக் கழகம், மே 17 இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, ஆதித் தமிழா் பேரவை, புரட்சிகர இளைஞா் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினா் பங்கேற்றன.
இதில் 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கான பொதுத் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். மேலும் பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் குழந்தைத் தொழிலாளா்போல வேடமணிந்து போராட்டத்தில் பங்கேற்றனா்.