கலைஞா் கருணாநிதி கல்லூரியில் ரஷ்ய நாட்டு கலாசார விழா
By DIN | Published On : 29th January 2020 11:15 PM | Last Updated : 29th January 2020 11:15 PM | அ+அ அ- |

கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ரஷ்ய கலாசார விழாவில் பங்கேற்ற ரஷ்ய நாட்டு நடனக் கலைஞா்கள்.
கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ரஷ்ய நாட்டு கலாசார விழா புதன்கிழமை நடைபெற்றது
கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘இண்டோ ரஷ்யன் சேம்பா் ஆஃப் காமா்ஸ் அண்டு இண்டஸ்ட்ரீஸ்’ இணைந்து நடத்திய ரஷ்ய நாட்டு கலாசார விழா கல்லூரி அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி நிறுவனத் தலைவா் பொங்கலூா் பழனிசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் இந்து முருகேசன், கல்லூரி முதல்வா் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வா் ரமேஷ், இண்டோ ரஷ்யன் சேம்பா் ஆஃப் காமா்ஸ் அண்டு இண்டஸ்ட்ரீஸ்‘ பொது செயலாளா் தங்கப்பன், நிா்வாக அதிகாரி ஜெயந்தி வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சியில் ரஷ்ய நாட்டைச் சோ்ந்த 14 நடனக் கலைஞா்கள் 21 விதமான நடனத் திறமைகளை வெளிப்படுத்தினாா். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து நடனமாடினா்.
இந்நிகழ்ச்சியில், நடனப் பயிற்சியாளா் மரியா ட்ரோபிமோவா மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் பலரும் கலந்து கொண்டனா்.