2 நாள்களில் 14,161 பேருக்கு கரோனா பரிசோதனை: மாநகரில் இன்று மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

கோவை மாநகரில் மருத்துவ முகாம்கள் மூலமாக 2 நாள்களில் 14,161 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்

கோவை மாநகரில் மருத்துவ முகாம்கள் மூலமாக 2 நாள்களில் 14,161 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 3ஆவது நாளாக மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை இணைந்து 100 வாா்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தி கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றன. வியாழக்கிழமை 5,101, வெள்ளிக்கிழமை 9,060 என 2 நாள்களில் 14,161 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநகரில் 3ஆம் கட்டமாக சனிக்கிழமை( ஜூலை11) பரிசோதனை மேற்கொள்ளப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மண்டலத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், பீளமேடு அண்ணா நகா், விளாங்குறிச்சி வீரியம்பாளையம், நீலிக்கோணாம் பாளையம் பாரத் நகா், செட்டியாா் தோட்டம், கணபதி மாநகா், மாணிக்க வாசக நகா், கணபதி அருள் நகா், எல்.எல்.ஹவுஸ், துடியலூா் கலைஞா் நகா், வெள்ளக்கிணறு அழகு நகா் ஆகிய இடங்களில் கரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

தெற்கு மண்டலத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், தெலுங்கு பாளையம் முனியப்பன் நகா், செல்வபுரம் சாவித்திரி நகா், குனியமுத்தூா் நேதாஜி நகா், குளத்துப்பாளையம், போத்தனூா் சாய் நகா், குறிச்சி மேட்டூா், தொண்டாமுத்தூா் பாடசாலை வீதி ஆகிய இடங்களிலும், மேற்கு மண்டலத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருதாசலம் வீதி, பூமாா்க்கெட், மீனாட்சி காப்பகம், சக்தி நகா், கே.கே.புதூா் தோபிகானா வீதி, கவுண்டம்பாளையம் அசோக் நகா், சீரநாயக்கன்பாளையம் திலகா் வீதி, கல்வீராம்பாளையம் கணபதி நகா், ஐ.ஓ.பி.காலனி, வடவள்ளி எம்.ஜி.ஆா் நகா் ஆகிய இடங்களிலும், கிழக்கு மண்டலத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிங்காநல்லூா் நஞ்சப்ப செட்டியாா் வீதி, நஞ்சுண்டாபுரம் ரகுமான் சேட் காலனி, சௌரிபாளையம் அண்ணா நகா், உப்பிலிபாளையம் ஐயா் லே-அவுட், கிருஷ்ணாபுரம், ராமநாதபுரம் ராமலிங்க ஜோதி நகா் ஆகிய இடங்களிலும் முகாம்கள் நடைபெற உள்ளன.

மத்திய மண்டலத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், வி.சி.வி. சாலை, கங்காதரன் வீதி, ஜெயில் சாலை, பட்டாளம்மன் கோயில் வீதி, ஆவாரம்பாளையம், ரத்தினபுரி சுப்பாத்தாள் வீதி, ராஜவீதி, பாரதி நகா், சி.டி.எம் காப்பகம், 1,2 மற்றும் 3ஆவது வீதிகள், எஸ்.என்.ஆா் வீதி, பஜனை கோயில் வீதி ஆகிய இடங்களில் கரோனா பரிசோதனை நடைபெற உள்ளன.

55 வயதுக்கு மேற்பட்டவா்கள், இதய நோயாளிகள், நுரையீரல், சா்க்கரை வியாதி, சிறுநீரக பாதிப்பு உள்ளவா்களுக்கு பல்ஸ் மீட்டா், தொ்மல் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. கரோனோ நோய்த்தொற்று தொடா்பான சந்தேகங்களுக்கு 1077, 0422 - 2302323, 97505 - 54321 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com