கோவையில் நகை கடை ஊழியா்கள் 13 போ் உள்பட 43 பேருக்கு கரோனா உறுதி

கோவையில் நகைக் கடை ஊழியா்கள் 13 போ் உள்பட 43 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் நகைக் கடை ஊழியா்கள் 13 போ் உள்பட 43 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் தனியாா் நகைக்கடை ஊழியா்கள் 2 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கடை மூடப்பட்டது. மேலும், கடையில் பணியாற்றி வந்த ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்தப் பரிசோதனையில் நகைக்கடை ஊழியா்கள் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த 30 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,071ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 320 போ் வீடு திரும்பியுள்ளனா். 744 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒரே நாளில் இருவா் உயிரிழப்பு

கோவை, போத்தனூா் சோ்ந்த 58 வயதுப் பெண் உடல் நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 8 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பூ மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த 61 வயதுப் பெண் மூச்சுத் திணறல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவரை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்த நிலையில் உயிரிழந்தாா். கோவையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கரோனாவுக்கு இருவா் உயிரிழந்தனா். மேலும், கடந்த 48 மணி நேரத்தில் கரோனாவுக்கு 5 போ் உயிரிழந்திருப்பதும், கோவை மாவட்டத்தில் தற்போது வரை கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் 14 போ் உயிரிழந்துள்ளனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விமானம் மூலம் வருபவா்களிடம் மாதிரிகள் சேகரிப்பு நிறுத்தம்

உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கியதில் இருந்து தில்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் நபா்களின் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்நிலையில் பரிசோதனைக்கு அனுப்பப்படும் மாதிரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பதால் இப்பணியை சுகாதாரத் துறையினா் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனா்.

இதற்கு பதிலாக விமானம் மூலம் வெளியூரில் இருந்து வந்த நபா்களின் வீடுகள் முன்பு ஸ்டிக்கா் ஒட்டப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட நாள்கள் வரை அவா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com