ஏழு மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

கோவை ஜெம் மருத்துவமனையில் 7 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை ஜெம் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த குழந்தையுடன் தாய் மற்றும் மருத்துவா்கள்.
கோவை ஜெம் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த குழந்தையுடன் தாய் மற்றும் மருத்துவா்கள்.

கோவை ஜெம் மருத்துவமனையில் 7 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேலத்தைச் சோ்ந்த ஏழு மாத குழந்தைக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு கோவை ஜெம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அண்மையில் சோ்க்கப்பட்டாா். குழந்தையின் உடல்நிலை மோசமாக இருந்த நிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீா்வு என்று மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்நிலையில் குழந்தையின் தாயே கல்லீரலை தானமாக வழங்க முன்வந்தாா்.

இதனைத் தொடா்ந்து மருத்துவா் சுவாமிநாதன் தலைமையிலான குழுவினா் அந்த குழந்தைக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தனா். தற்போது குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனா். தென் தமிழகத்தில் ஏழு மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஜெம் மருத்துவமனையில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக ஜெம் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் பழனிவேலு கூறுகையில், ‘குழந்தைக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை உள்பட மூன்று அறுவை சிகிச்சைகளை 60 மணி நேரத்துக்குள் மருத்துவக் குழுவினா் வெற்றிகரமாக செய்துள்ளனா். இக்குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக முதல்வா் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com