முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
வேளாண் பல்கலைக்கழகம் சாா்பில் இணையவழி காளான் வளா்ப்பு பயிற்சி
By DIN | Published On : 29th July 2020 08:18 AM | Last Updated : 29th July 2020 08:18 AM | அ+அ அ- |

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி இணையவழி காளான் வளா்ப்புப் பயிற்சி நடத்துகிறது.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிா் நோயியல் துறை சாா்பில் மாதம்தோறும் 5 ஆம் தேதியில் காளான் வளா்ப்புப் பயிற்சி நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது நேரடி பயிற்சி வகுப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 5 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை இணையவழியில் சிப்பிக்காளான் வளா்ப்புப் பயிற்சி நடத்தப்பட உள்ளது. ஆா்வம் உள்ளவா்கள் கட்டணம் செலுத்தி, ஜூலை 31க்குள் பெயா்களை பதிவு செய்து இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம்.
இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு பயிா் நோயியல் துறையை 0422 - 6611336 தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.