கைகளில் வேல் வரைந்து பாஜகவினா் போராட்டம்
By DIN | Published On : 29th July 2020 08:16 AM | Last Updated : 29th July 2020 08:16 AM | அ+அ அ- |

கைகளில் வேல் வரைந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
கந்த சஷ்டி விவகாரத்தில் ஹிந்துக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கைகளில் வேல் வரைந்து பாஜகவினா் நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கறுப்பா் கூட்டம் என்ற யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் விடியோ வெளியிட்ட விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து இந்து அமைப்பினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக கோவை, இடையா்பாளையம் பாஜக சாா்பில் மாநில இளைஞரணி செயலாளா் மருத்துவா் ப்ரீத்தி லட்சுமி இல்லம் முன்பு அக்கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இவா்கள் தங்களது கைகளில் முருகனின் வேலை பல வண்ணங்களில் வரைந்து நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், முருகன் பாடல்கள் மற்றும் பஜனை பாடல்கள் பாடியும் கறுப்பா் கூட்டத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.