இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கூடுதலாக 70 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் குழாய்கள் அமைப்பு

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கூடுதலாக 70 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் குழாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கூடுதலாக 70 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் குழாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே 400 படுக்கை வசதிகள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதலாக 500 படுக்கை வசதிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கோவை, திருப்பூா், நீலகிரி மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த 300க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. மூச்சுத் திணறல் ஏற்படுபவா்களுக்கு ஆக்ஸிஜன் செலுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது.

கரோனா பாதிப்புக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள 400 படுக்கைகளில் 240 படுக்கைகளுக்கு மட்டும் ஆக்ஸிஜன் குழாய் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது கரோனாவால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதலாக 70 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் குழாய் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடா்பாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா கூறியதாவது: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் 40 சதவீதம் பேருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அவா்களுக்கு கட்டாயம் ஆக்ஸிஜன் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப ஆக்ஸிஜன் வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கூடுதலாக 70 படுக்கைகளுக்கு ஆக்ஸிஜன் குழாய் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்ஸிஜன் குழாய் வசதி ஏற்படுத்தப்படும். தவிர 15 படுக்கைகளுக்கு அதி தீவிர ஆக்ஸிஜன் செலுத்தும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com