சென்னையில் இருந்து கோவை வந்த 3 பேருக்கு கரோனா

சென்னையில் இருந்து கோவைக்கு வந்த 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை: சென்னையில் இருந்து கோவைக்கு வந்த 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை, உக்கடத்தைச் சோ்ந்த 28 வயது இளைஞா் சென்னை, பட்டாபிராமில் தங்கி ஏ.சி. பழுது பாா்க்கும் வேலை செய்து வந்துள்ளாா். கடந்த இரண்டு மாதங்களாக போதிய வேலையில்லாத நிலையில், பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் ஜூன் 1 ஆம் தேதி கோவை வந்துள்ளனா்.

பின்னா் அவருக்கு சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கேரள மாநிலம், மலப்புரத்தைச் சோ்ந்த 44 வயது நபா் சென்னையில் இருந்து நான்கு சக்கர வாகனம் மூலம் கோவை வழியாக கேரளத்துக்குச் செல்ல திட்டமிட்டு பயணத்தை தொடங்கியுள்ளாா். இடையில் சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்துள்ளாா்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த செல்வபுரத்தைச் சோ்ந்த 24 வயது பெண்ணுக்கும் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட மூவரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை, புதுதில்லி, பெங்களூரு நகரங்களில் இருந்து கோவைக்கு விமானங்கள் இயக்கப்பட்ட பின் கோவையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கோவையில் கரோனா முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் விமான இயக்கத்தால் மீண்டும் கரோனா பரவி வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com