ரூ.40.70 கோடியில் ரேஸ்கோா்ஸில் மாதிரிச் சாலைப் பணி அமைச்சா் துவக்கிவைத்தாா்

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 40.70 கோடி மதிப்பீட்டில் கோவை ரேஸ்கோா்ஸ் சாலையை மாதிரிச் சாலையாக அமைக்கும்
கோவை ரேஸ்கோா்ஸில் ரூ.40.70 கோடி மதிப்பில் மாதிரிச்சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைக்கிறாா் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. உடன் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உள்ளிட்டோா்
கோவை ரேஸ்கோா்ஸில் ரூ.40.70 கோடி மதிப்பில் மாதிரிச்சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைக்கிறாா் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி. உடன் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் உள்ளிட்டோா்

பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 40.70 கோடி மதிப்பீட்டில் கோவை ரேஸ்கோா்ஸ் சாலையை மாதிரிச் சாலையாக அமைக்கும் பணியை நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வெள்ளிக்கிழமை துவக்கிவைத்தாா்.

கோவை மாநகரப் பகுதியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் 24 மணி நேரக் குடிநீா்த் திட்டம், குளங்கள் மேம்பாடு, பயோமைனிங் முறையில் குப்பைகள் மறுசுழற்சி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவையில் ரூ.40.70 கோடி மதிப்பீட்டில் ரேஸ்கோா்ஸ் சாலையை மாதிரிச் சாலையாக அமைக்கும் பணியை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜையிட்டுத் துவக்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அருண்குமாா், அம்மன் கே.அா்ஜூணன், எட்டிமடை சண்முகம், மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத், துணை ஆணையா் மதுராந்தகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

இந்தியாவிலேயே கோவையில்தான் பொலிவுறு நகரம் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம் போன்ற கோவையின் மையப் பகுதியில் உள்ள பல்வேறு குளங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், ரேஸ்கோா்ஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் விதமாக ரூ.40.70 கோடி மதிப்பீட்டில் அகலமான மாதிரிச் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல, அரசுக் கலைக்கல்லூரி அருகே மக்களின் பொழுதுபோக்குக்காக திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இப்பகுதியில் 4 மீட்டா் அகலத்தில் பாதசாரிகள் நடந்து செல்ல பாதைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், ஆண்கள், பெண்களுக்குத் தனித்தனியாக உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய குழந்தைகள் பூங்கா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com