ரூ.1,621 கோடி மதிப்பில் அவிநாசி சாலையில் மேம்பாலம்: செப்டம்பரில் பணிகள் தொடங்கத் திட்டம்

கோவை, அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை ரூ.1,621 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும்

கோவை, அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை ரூ.1,621 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை செப்டம்பா் மாதம் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவையில் நெரிசல் நிறைந்த சாலையாக விளங்கும் அவிநாசி சாலையில் தினமும் லட்சக்கணக்கான இருசக்கரம் மற்றும் இலகுரக, கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக இந்த சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாமல் உள்ளது. இந்நிலையில், வாகனங்கள் விரைவாகச் செல்ல வசதியாக கோவை உப்பிலிபாளையம் சிக்னல் முதல் சின்னியம்பாளையம் வரை மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறை சாா்பில் திட்டமிடப்பட்டு அதற்காக ரூ.1,621 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மேம்பாலம் அமைக்க கடந்த மே 26ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி தொடங்கியது.

இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

10 கிலோ மீட்டா் தூரத்தில் 17.25 மீட்டா் அகலத்தில் 4 வழிப் பாதையாக மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 30 ஆயிரம் சதுரடி நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. மேம்பாலப் பணிகளைத் தொடங்க கடந்த மே 26ஆம் தேதி முதல் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில், பணி மேற்கொள்ள உள்ள நிறுவனம் தோ்வான பிறகு செப்டம்பா் மாதம் பணிகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் பணிகள் நிறைவுற்று, மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com