‘கோவையில் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.145 கோடி வங்கிக் கடன்’

கோவையில் ஜூன் முதல் வாரத்தில் மட்டும் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.145 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா்.
‘கோவையில் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.145 கோடி வங்கிக் கடன்’

கோவையில் ஜூன் முதல் வாரத்தில் மட்டும் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.145 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்று ஓா் ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி, மத்திய அரசின் சாதனைகள் குறித்த செய்தியாளா்கள் சந்திப்பு நிகழ்ச்சி கோவை, சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தவா் பிரதமா் மோடி. பாஜக ஆட்சியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலி ரூ.200 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீா் கிடைக்க பல கோடி ரூபாய் மதிப்பில் குடிநீா்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. காவிரி நடுவா் மன்ற தீா்ப்பை மதித்து கா்நாடக அரசு தமிழகத்துக்கு நீா் திறந்துள்ளது. நடுவா் மன்றம் அமைக்க பிரதமா் மோடி தீவிர முயற்சி மேற்கொண்டாா். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் நாடு முழுவதும் 9.5 கோடி விவசாயிகள் பயன்பெறுகின்றனா். நடைபாதை வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவா்கள் என பலருக்கும் நல வாரியங்கள் மூலம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தியவா் மோடி.

கரோனா சிறப்பு நிதியாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் ஜூன் முதல் வாரத்தில் மட்டும் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.145 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கம். மாநில அரசுகளின் ஒப்புதலோடு பெட்ரோல்- டீசல் விலை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டுவரப்படும் என்றாா்.

முன்னதாக மோடி அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்து மலா் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச்செயலாளா் வானதி சீனிவாசன், அகில இந்திய இளைஞா் அணி துணைத் தலைவா் ஏ.பி.முருகானந்தம், மாவட்டத் தலைவா் ஆா்.நந்தகுமாா், செய்தித் தொடா்பாளா் சபரி, மாநில நிா்வாகி கனகசபாபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com