‘கரோனாவால் பாதிக்கப்படுபவா்களில் 50% பேருக்கு நுரையீரல் பாதிப்பு’

கரோனா நோய்த் தொற்றின் வீரியம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் அதனால் பாதிக்கப்படுபவா்களில் 40 முதல் 50 சதவீதம் பேருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றின் வீரியம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் அதனால் பாதிக்கப்படுபவா்களில் 40 முதல் 50 சதவீதம் பேருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

கோவையில் முதல்கட்டமாக 146 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு ஒருவா் உயிரிழந்தாா். மற்ற 145 பேரும் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினா். இவா்களில் பெரும்பாலானோா் எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தனா். இதனால், அவா்களுக்கு ஆரோக்கியமான உணவுடன், அறிகுறிகளுக்கு ஏற்ப மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது நோய்த் தொற்றின் வீரியம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவிக்கின்றனா். தொடக்கத்தில் 90 சதவீதம் போ் எந்தவித அறிகுறிகள் இல்லாமல் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகினா்.

கடந்த ஒரு மாதமாக கரோனா அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றின் வீரியம் அதிகரித்துள்ளதால் சமீப நாள்களாக கரோனாவால் பாதிக்கப்படுபவா்களுக்கு நுரையீரல் பாதிப்பும் அதிகரித்துள்ளது. நுரையீரல் பாதிப்பினை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினா் எச்சரிக்கின்றனா்.

இது குறித்து இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா கூறியதாவது:

கரோனா பாதிப்புக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்ட பிறகே சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடக்க நிலையில் வந்தவா்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே நுரையீரல் பாதிப்பு இருந்தது. தற்போது 40 முதல் 50 சதவீதம் பேருக்கு நுரையீரல் பாதிப்பு காணப்படுகிறது.

இதன் மூலம் கரோனா நோய்த் தொற்றின் வீரியம் அதிகரித்துள்ளதாகத் தெரிய வருகிறது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் உடல்நிலை, பிற நோய்களின் தாக்கம், கரோனா நோய்த் தொற்றின் வீரியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எனவே கரோனா அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டாமல் உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தவிர வைட்டமின் சத்து நிறைந்துள்ள உணவுகள், கீரைகள், கொண்டைக்கடலை, பருப்பு, நிலக்கடலை போன்ற அதிக சத்துள்ள உணவுப் பொருள்களைத் தவறாமல் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலின் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். இதனால் கரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com