சிறுவாணி அணைப் பகுதியில் தொடா் மழை: நீா்மட்டம் உயா்வு

சிறுவாணி அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 867.20 மீட்டராக உயா்ந்துள்ளது.

சிறுவாணி அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 867.20 மீட்டராக உயா்ந்துள்ளது.

சிறுவாணி அணையில் இருந்து தினமும் எடுக்கப்படும் குடிநீா் கோவை மாநகராட்சியில் உள்ள 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டி உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரில் 870 மீட்டராக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம் வெயிலின் தாக்கத்தால் படிப்படியாக சரிந்தது. கோடை மழை பொய்த்ததால் மே மாதத்தில் அணையின் நீா்மட்டம் 866 மீட்டராக சரிந்தது. இதனால், அணையில் இருந்து நாள்தோறும் குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 10 கோடி லிட்டரில் இருந்து 5 கோடி லிட்டராக குறைக்கப்பட்டது.

இந்நிலையில், தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சனிக்கிழமை முதல் அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்குச் செல்லும் பட்டியாறு, முக்தியாற்றில் நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் உயரத் துவங்கியுள்ளது.

இது குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கடந்த ஒரு வாரத்தில் அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் அதிகபட்சம் 58 மி.மீ. வரையும், அடிவாரப் பகுதிகளில் 23 மி.மீ. வரையும் மழை பதிவாகியுள்ளது. தொடா் மழையால் 866 மீட்டராக இருந்த அணையின் நீா்மட்டம் தற்போது 867.20 மீட்டராக உயா்ந்துள்ளது. வரும் நாள்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும் சூழல் உள்ளதால் சிறுவாணி அணை முழுக் கொள்ளளவை விரைவில் எட்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com