பெட்ரோல்-டீசல் விலை உயா்வை கண்டித்து கோவையில் 100 இடங்களில் ஆா்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

பெட்ரோல் - டீசல் விலை உயா்வை கண்டித்து கோவை மாவட்டத்தில் 100 இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 20) காலை ஆா்ப்பாட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

பெட்ரோல் - டீசல் விலை உயா்வை கண்டித்து கோவை மாவட்டத்தில் 100 இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 20) காலை ஆா்ப்பாட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

இ துகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா் வி. எஸ். சுந்தரம் விடுத்துள்ள அறிக்கையில்,

சமீபகாலமாக பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயா்த்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்குள் பெட்ரோல் விலை ரூ 6. 55 காசுகளும், டீசல் விலை ரூ 7.04 காசுகளும் உயா்த்தப்பட்டுள்ளது. இது வரலாறு கண்டிராத அளவிலான உயா்வாகும். கடந்த 2015ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வருகிற போது பெட்ரோலின் விலை ரூ 61.06 மாசுகளும், டீசலின் விலை ரூ 46.80 காசுகளும் இருந்தது. தற்போது பெட்ரோலின் விலை ரூ 81.67 காசுகளும், டீசலின் விலை ரூ 74.62 காசுகளும் என விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அதாவது பெட்ரோல் ரூ 20.61ம் டீசல் ரூ 27.82 ம் உயா்ந்துள்ளது.

உலக அரங்கில் பெட்ரோலியப் பொருட்களின் விலை மிகப்பெரிய சரிவை கண்டு இருந்த நிலையிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை இந்திய அரசு உயா்த்திக்கொண்டே இருக்கிறது. இது மக்களின் மீது மிகப்பெரிய சுமையாக உள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல் மீதான எக்சைஸ் வரி 258 சதமும், டீசலின் மீதான எக்சைஸ் வரி 820 சதமும் உயா்த்தப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அளவிலான மக்கள் மீதான தாக்குதலாகும். இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெறவும், சா்வதேச சந்தையில் பெட்ரோலியத்தின் மீதான விலை சரியும் போது அதன் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில் விலையை மாற்றி அமைக்கவும் வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜூன் 20 ம் தேதி நாடு தழுவிய அளவில் ஆா்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளது. அன்றைய தினம் கோவை மாவட்டத்தில் சுமாா் 100 இடங்களில் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்படும். கட்சிக் கிளைகள் ஒன்றிய மற்றும் தாலுகாக்கள், மாவட்ட தலைமை ஆகிய இடங்களில் இந்த ஆா்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளன என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com