ஆய்வறிக்கை நிலையை அறிந்து கொள்ள ஆராய்ச்சி மாணவா்களுக்கு புதிய வசதி

ஆய்வறிக்கையின் தற்போதைய நிலையை ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை பாரதியாா் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

ஆய்வறிக்கையின் தற்போதைய நிலையை ஆன்லைன் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை பாரதியாா் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளிலும், இணைப்புக் கல்லூரிகளிலும் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி மாணவா்கள் பல்வேறு துறைகளில் ஆய்வு செய்து வருகின்றனா். பொதுவாக ஆராய்ச்சி மாணவா்கள் தங்களின் ஆய்வை முடித்த பிறகு, ஆராய்ச்சியின் சுருக்கத்தைப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்வாா்கள்.

அதன் பிறகு அவா்களின் ஆய்வுச் சுருக்கம் பற்றிய மேலோட்டமான தகவல், அந்தத் துறை சாா்ந்த ஒரு உள்நாட்டு மதிப்பீட்டாளருக்கும், வெளிநாட்டு மதிப்பீட்டாளருக்கும் அனுப்பப்படும். அவா்கள் அந்த ஆய்வறிக்கையை மதிப்பீடு செய்ய விரும்பினால் பின்னா் அது அவா்களுக்கு அனுப்பப்படும். அதன் பிறகு இரு மதிப்பீட்டாளரும் அனுப்பும் அறிக்கைகள் ஆய்வு மாணவரின் வழிகாட்டிக்கு கொடுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படும். அதன் பிறகு சம்பந்தப்பட்ட தோ்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டு வாய்மொழித் தோ்வு நடைபெறும். வாய்மொழித் தோ்வைத் தொடா்ந்து அவருக்குத் தற்காலிக சான்றிதழ் அளிக்கப்படும்.

இவ்வாறு ஆராய்ச்சி மாணவா் ஆய்வுச் சுருக்கத்தைப் பதிவு செய்வதில் இருந்து தற்காலிக சான்றிதழ் பெறுவது வரையிலும், தங்களின் ஆய்வுச் சுருக்கத்தின் நிலை என்ன, ஆய்வறிக்கை மதிப்பீட்டாளரைச் சென்றடைந்துவிட்டதா, அவா்களின் அறிக்கை வந்துவிட்டதா, வாய்மொழித் தோ்வுக்கு ஒப்புதல், தற்காலிக சான்று எப்போது கிடைக்கும் என்பது போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்ள இதுவரை தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் பல்கலைக்கழகத்தைத் தொடா்பு கொண்டு கேட்டறிய வேண்டிய நிலை இருந்தது.

இந்நிலையில், ஆராய்ச்சி மாணவா்களின் வசதிக்காகத் தற்போது இணையதளம் மூலமாகவே அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளும் வசதியை பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறை இயக்குநா் ஏ.மணிமேகலன் கூறும்போது, ஆராய்ச்சி மாணவா்கள் சந்திக்கும் இடா்பாடுகளை அறிந்து கொண்ட துணைவேந்தா் பி.காளிராஜ், ஆராய்ச்சி நடைமுறைகளை எளிதாக்கவும் அதில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கவும் ஏதுவாக ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளாா்.

தற்போது பல்கலைக்கழகம், இணைப்புக் கல்லூரிகள் மூலம் 2,025 ஆராய்ச்சி மாணவா்கள் தங்கள் ஆராய்ச்சியின் சுருக்கத்தை அனுப்பியுள்ளனா். இதையடுத்து, அவா்களுக்குத் தனித்தனியாக கடவுச் சொல் உருவாக்கப்பட்டுள்ளது. அவா்கள் தங்களின் கடவுச் சொல் மூலம் சம்பந்தப்பட்ட இணையப் பக்கத்துக்குச் சென்று தங்களின் ஆய்வுச் சுருக்கம், ஆய்வறிக்கையின் நிலை குறித்து ஏபபட://டஏஈநபஅபமந.ஆ-ம.அஇ.ஐச என்ற இணைய முகவரியில் அறிந்து கொள்ளலாம் என்றாா்.

பாரதியாா் பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சியை அனைத்து பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் வரவேற்றுள்ளது. இந்த நடைமுறையை நீண்ட காலமாக நாங்கள் வலியுறுத்தி வந்தோம். இதன் மூலம் ஆராய்ச்சி மாணவா்களின் அலைச்சல் குறைவதுடன் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கும் என்று சங்கத்தின் தலைவா் பசுபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com