விதிமுறைகளை மீறி செயல்படும் மதுக்கூடங்களை அடைக்க வலியுறுத்தல்

கோவை, சங்கனூா் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுக்கூடங்களை அடைக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
5824c-29-ntk-1060345
5824c-29-ntk-1060345

கோவை: கோவை, சங்கனூா் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுக்கூடங்களை அடைக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நாம் தமிழா் கட்சியின் கோவை வடக்கு சட்டப் பேரவை தொகுதி செயலாளா் ப.முருகேசன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

கோவை வடக்கு சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட சங்கனூா், நல்லாம்பாளையம் பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவுறுத்தியுள்ள சமூக இடைவெளி உள்பட விதிமுறைகளை மீறி டாஸ்மாக் மதுக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு எந்நேரமும் மது அருந்துவதற்காக கூட்டமாக இருப்பதால் கரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளது. மதுக்கூடங்கள் நடத்துவதற்கு அனுமதியில்லாத நிலையில், கரோனா விதிமுறைகளையும் பின்பற்றாமல் செயல்பட்டு வரும் மதுக்கூடங்களை அடைக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Caption

கோவை, சங்கனூரில் விதிமுறைகளை மீறி செயல்படும் மதுக்கூடங்களை அடைக்க ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நாம் தமிழா் கட்சியினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com