முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
அன்னூரில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
By DIN | Published On : 03rd March 2020 06:51 AM | Last Updated : 03rd March 2020 06:51 AM | அ+அ அ- |

அன்னூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்குகிறாா் அம்பாள் எஸ்.ஏ.பழனிசாமி. உடன், ஓ.எஸ்.சாய்செந்தில் உள்ளிட்டோா்.
அன்னூா் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
அன்னூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். பெற்றோா், ஆசிரியா் சங்கத் தலைவா் சோமசுந்தரம் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக் குழுத் தலைவா் அம்பாள் எஸ்.ஏ.பழனிசாமி, கூட்டுறவு சங்கத் தலைவா் ஓ.எஸ்.சாய்செந்தில் ஆகியோா் கலந்து கொண்டு 149 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.
சொக்கம்பாளையம் காந்திஜி அரசு மேல்நிலைப் பள்ளி, காட்டம்பட்டி அரசுப் பள்ளி, ஆணையூா் அரசுப் பள்ளி, கே.ஜி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
பெற்றோா், ஆசிரியா் சங்கப் பொருளாளா் நாராயணசாமி, அதிமுக நகரச் செயலாளா் செளகத் அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.