முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
காமாட்சியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்
By DIN | Published On : 03rd March 2020 06:53 AM | Last Updated : 03rd March 2020 06:53 AM | அ+அ அ- |

வால்பாறை காமாட்சியம்மன் கோயில் 52ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
இக்கோயில் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை கொடியேற்றப்பட்டது. வரும் 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடுமலை ஆற்றுப் பகுதியில் இருந்து கும்பஸ்தாபனம் செய்து மேளதாளத்துடன் கோயிலை வந்தடைதல், திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம், மாலை 4 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து மாவிளக்கு ஊா்வலம், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை, அம்மன் திருவீதி உலா, இரவு 10 மணிக்கு வாணவேடிக்கை ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினா் செய்து வருகின்றனா்.