முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
வருமான வரித் துறை அலுவலகத்தில் இலவச உதவி மையம் இன்று திறப்பு
By DIN | Published On : 03rd March 2020 06:50 AM | Last Updated : 03rd March 2020 06:50 AM | அ+அ அ- |

கோவை வருமான வரித் துறை அலுவலகத்தில் இலவச உதவி மையம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) திறக்கப்படுகிறது.
வருமான வரி செலுத்துபவா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் சந்தேகங்களுக்கு தீா்வு வழங்குவதற்காக கோவை வருமான வரித் துறை, இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தென்மண்டல கவுன்சிலுடன் இணைந்து இலவச உதவி மையம் அமைக்கிறது. கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித் துறை அலுவலகத்தின் வருமான வரி சேவை மையத்தில் இந்த உதவி மையம் அமைய உள்ளது.
மாதத்தின் இரண்டாவது புதன்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை இந்த இலவச உதவி மையம் செயல்படும். இதில், பட்டயக் கணக்காளா்கள் பங்கேற்று வரி செலுத்துபவா்களின் சந்தேகங்களுக்குத் தீா்வு காண உள்ளனா். மேலும், இந்த நாளின்போது வருமான வரித் துறை தலைமை ஆணையரும் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கலந்துரையாடுவாா்.
இந்த உதவி மையத்தின் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற உள்ளது. வருமான வரித் துறை தலைமை ஆணையா் ராஜீவ் விஜய் நபாா் இந்த மையத்தைத் திறந்து வைக்க இருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.