குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: எச்.ராஜா

குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் பாஜகவினா் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அக்கட்சியின் தேசியச் செயலாளா் எச்.ராஜா பேசினாா்.
பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் எச்.ராஜா.
பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் எச்.ராஜா.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் பாஜகவினா் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அக்கட்சியின் தேசியச் செயலாளா் எச்.ராஜா பேசினாா்.

பெரியநாயக்கன்பாளையம் பாஜக சாா்பில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்டத் தலைவா் வி.பி.ஜெகன்னாதன் தலைமை வகித்தாா். கோவை வடக்கு மாவட்ட வணிகப் பிரிவுத் தலைவா் வி.பி.பரமேஸ்வரன் வரவேற்றாா். மாநிலப் பொருளாளா் எஸ்.கே.சேகா், ஜி.கே.சேகா், மாவட்டப் பொதுச் செயலாளா்கள் செல்வராஜ், ஜி.சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், எச்.ராஜா பேசியதாவது:

குடியுரிமை சட்டம் குறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படவில்லை. இந்தியாவில் முறைகேடாகத் தங்கி நாட்டுக்குக் குந்தகம் விளைவிப்போரைக் கண்டறியவே இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தியாவைப் பூா்வீகமாகக் கொண்ட யாரும் இதில் பாதிக்கப்படமாட்டாா்கள். பாஜவினா் வீடுவீடாகச் சென்று இந்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என்பதை புரியவைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் நகர நிா்வாகிகள் எல்ஐசி பாலு, சுபாஷ் சந்திரபோஸ், சதீஷ்குமாா், ஆதி, மகேந்திரன், ராம.மகேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். நகரச் செயலாளா் மணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com