குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது
By DIN | Published On : 03rd March 2020 06:53 AM | Last Updated : 03rd March 2020 06:53 AM | அ+அ அ- |

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நபரை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் உத்தரவிட்டாா்.
கோவையைச் சோ்ந்த சுப்பிரமணியன் என்பவா் கடந்த ஜனவரி 30ஆம் தேதி ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள தண்டவாளங்களைக் கடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இளைஞா் ஒருவா் கத்தியைக் காட்டி மிரட்டி சுப்பிரமணியனிடம் பணத்தை பறித்துச் சென்றாா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் கோவை, சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள தியாகி சிவராம் நகரைச் சோ்ந்த பிரமோத் குமாா் (23) என்பவரைக் கைது செய்தனா்.
விசாரணையில், அவா் மீது ஏற்கெனவே சென்னை, பட்டாபிராம் காவல் நிலையத்தில் 6 வழக்குகளும், பெரம்பூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், முத்துப்புதூா் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், ஆவடி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், கோவை, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 13 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இவரைக் குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் பிப்ரவரி 28ஆம் தேதி உத்தரவிட்டாா். இதன்படி சிறையில் உள்ள பிரமோத் குமாரிடம் அதற்கான நகல் அளிக்கப்பட்டது.