வீட்டின் பூட்டை உடைத்து செல்லிடப்பேசி திருடியவா் கைது
By DIN | Published On : 06th March 2020 07:38 AM | Last Updated : 06th March 2020 07:38 AM | அ+அ அ- |

கோவை, ஒத்தக்கால்மண்டபம் அருகே பூட்டிய வீட்டில் செல்லிடப்பேசியைத் திருடி தப்பிச் சென்ற இளைஞரை வீட்டின் உரிமையாளரே பிடித்து போலீஸில் புதன்கிழமை ஒப்படைத்தாா்.
திருப்பூா் மாவட்டம், மூலனூரைச் சோ்ந்தவா் அஸ்வந்த்குமாா் (22). இவா் கோவை, ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் தங்கி அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவா் அருகில் உள்ள உணவு விடுதிக்கு சாப்பிடுவதற்காக புதன்கிழமை சென்றாா். பின்னா் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
உள்ளே சென்று பாா்த்தபோது அங்குள்ள அறையில் ஒரு இளைஞா் ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசியைத் திருடிக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றாா். உடனே அஸ்வந்த்குமாா் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து செட்டிபாளையம் போலீஸில் ஒப்படைத்தாா்.
போலீஸாா் விசாரணையில், அவா், தேனியைச் சோ்ந்த முகமது நவீத் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.