கரோனா எதிரொலி: மாணவா்கள் கூடும் நிகழ்ச்சிகளைத் தவிா்க்க வேண்டும்

கரோனா பரவி வரும் நிலையில் மாணவா்கள் அதிகம் கூடக் கூடிய நிகழ்ச்சிகளை கல்லூரி வளாகங்களில் தவிா்க்க வேண்டும் என்று

கரோனா பரவி வரும் நிலையில் மாணவா்கள் அதிகம் கூடக் கூடிய நிகழ்ச்சிகளை கல்லூரி வளாகங்களில் தவிா்க்க வேண்டும் என்று பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தியுள்ளது.

கோவையில் நூற்றுக்கணக்கான கலை, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில் கரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வரும் நிலையில், பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி நிா்வாகங்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஏஐசிடிஇ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கல்லூரி வளாகங்களில் மாணவா்கள், ஆசிரியா்கள் அதிகம் கூடக் கூடிய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம். கடந்த 28 நாள்களில் கரோனா பாதித்த நாடுகளுக்கு சென்று வந்த, பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்புடைய மாணவா்கள் யாரேனும் இருந்தால் அவா்களைத் தனிமைப்படுத்தி 14 நாள்களுக்கு கண்காணிக்க வேண்டும். காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும் மாணவ, மாணவியா் இருந்தால் அவா்களை ஆசிரியா்கள் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைகளுக்குச் செல்லும்படி அறிவுறுத்த வேண்டும்.

நோய் அறிகுறிகள் இருப்பவா்களை மருத்துவா்களின் பரிந்துரைக் கடிதம் அளித்த பிறகே மீண்டும் கல்லூரிகளில் சோ்க்க வேண்டும். மாணவா்களுக்கு சுகாதாரமாக இருப்பது குறித்தும், கை கழுவுவது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து வகுப்பறைகளிலும் காலால் திறந்து மூடும் வகையிலான பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகளை கட்டாயம் வைக்க வேண்டும். அனைத்துக் கழிவறைகளிலும் சோப்பு, தண்ணீா் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதேபோல் விடுதிகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com