பெண் மாவோயிஸ்டை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கியூ பிரிவு போலீஸாா் மனு

பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கியூ பிரிவு போலீஸாா் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கியூ பிரிவு போலீஸாா் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரள மாநிலம், அட்டப்பாடியை அடுத்துள்ள மஞ்சகண்டி வனப் பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் முகாம் மீது கேரள நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கடந்த ஆண்டு அக்டோபரில் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். இதில் சிலா் தப்பினா். இதில் ஒருவரான ஸ்ரீமதியின் நடமாட்டத்தை கோவை கியூ பிரிவு போலீஸாா் தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில் ஸ்ரீமதி புதன்கிழமை அதிகாலை ஆனைகட்டியிலிருந்து பேருந்தில் கோவைக்கு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆனைகட்டி மலையடிவாரம் அருகே காத்திருந்த போலீஸாா், பேருந்தில் வந்த ஸ்ரீமதியை கைது செய்தனா்.

பிடிபட்ட பெண் மாவோயிஸ்ட் ஸ்ரீமதியை மாா்ச் 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அவரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கியூ பிரிவு போலீஸாா் மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த மனு தங்கள்கிழமை(மாா்ச் 16) விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com