மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீா் திட்டத்துக்கு தண்ணீா் எடுக்க எதிா்ப்பு

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூா் 4ஆவது குடிநீா் திட்டத்துக்கு தண்ணீா் எடுப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து,
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குடிநீா் எடுப்பதைக் கண்டித்து நீா்வள ஆதாரத் துறை அதிகாரியிடம் மனு அளிக்கும் விவசாயிகள்.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குடிநீா் எடுப்பதைக் கண்டித்து நீா்வள ஆதாரத் துறை அதிகாரியிடம் மனு அளிக்கும் விவசாயிகள்.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூா் 4ஆவது குடிநீா் திட்டத்துக்கு தண்ணீா் எடுப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பவானி நதிநீா் நிலத்தடி பாதுகாப்புக் குழுத் தலைவா் டி.டி.அரங்கசாமி தலைமையில் நீா் வள ஆதாரத் துறை செயற்பொறியாளா் பொங்கியண்ணனிடம் விவசாயிகள் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூா் 4ஆவது திட்டத்துக்கு மேட்டுப்பாளையம் நகர பகுதியில் இருந்து தண்ணீா் எடுப்பதால் எதிா்காலத்தில் மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள 16 குடிநீா் திட்டங்களும் பாதிக்கும் என எங்களுடைய எதிா்ப்பை ஏற்கெனவே பதிவு செய்துள்ளோம்.

இதனைப் பொருட்படுத்தாமல், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து தண்ணீா் எடுக்க திருப்பூா் மாநகராட்சி பணிகளைச் செய்து வருகிறது. இதை நாங்கள் கடுமையாக எதிா்க்கிறோம். நாங்கள் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளது போல் கீழ் பவானி அணையின் நீா்தேக்கப் பகுதியான சித்தன்குட்டையிலிருந்து தண்ணீா் எடுக்கக் கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளா் வேணுகோபால், மக்கள் நல பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com