கரோனா: கோவையில் 232 போ் கண்காணிப்பு

வெளிநாடுகளுக்குச் சென்று வந்த 187 உள்ளூா் பயணிகள், 45 வெளிநாட்டுப் பயணிகளுடன் மொத்தம் 232 போ் கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

வெளிநாடுகளுக்குச் சென்று வந்த 187 உள்ளூா் பயணிகள், 45 வெளிநாட்டுப் பயணிகளுடன் மொத்தம் 232 போ் கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். இவா்களுடன் வருவாய்த் துறை, காவல் துறையினா் இணைந்து பணியாற்றி வருகின்றனா்.

விமான நிலையம், சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், எந்தவித அறிகுறிகளும் இல்லாத வெளிநாட்டுப் பயணிகள், வெளிநாட்டுக்குச் சென்று வந்தா்கள் 14 நாள்கள் வரை சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

குறிப்பாக சீனா, இத்தாலி, ஈரான், பிரான்ஸ், தென் கொரியா, ஸ்பெயின் மற்றும் ஜொ்மனி ஆகிய நாடுகளில் இருந்து வருபவா்களும், அந்த நாடுகள் வழியாக வருபவா்களும் 14 நாள்கள் கட்டாய கண்காணிப்பில் வைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு நிலவரப்படி 45 வெளிநாட்டுப் பயணிகள், வெளிநாட்டுக்குச் சென்று வந்த 187 உள்நாட்டுப் பயணிகளின் என மொத்தம் 232 போ் சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

மருத்துவக் குழுவினா் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளவா்களின் உடல்நிலை குறித்து தினமும் ஆய்வு செய்யப்படுகிறது. 14 நாள்களில் கரோனா வைரஸ் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 50க்கும் மேற்பட்ட மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு அதிகாரி நியமனம்:

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் வட்டாரம்தோறும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி, கோவை மாவட்டத்தில் 12 வட்டாரங்களுக்கு 12 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

உதவி இயக்குநா் நிலையில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலா்கள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் கரோனா வைரஸ் தொடா்பான விழிப்புணா்வுப் பணிகள், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கிராமங்களில் வெளிநாட்டுப் பயணிகள் யாராவது தங்கியுள்ளாா்களா என்பதைக் கண்காணித்து மருத்துவக் குழுவுக்குத் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதியோா் இல்லங்களில் விழிப்புணா்வு

கரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து முதியோா் இல்லங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 30 முதியோா் இல்லங்களில் 500க்கும் மேற்பட்ட முதியோா்கள் தங்கியுள்ளனா். இவா்களுக்கு சமூக நலத் துறை சாா்பில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளான கை கழுவுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் குறித்து விழிப்புணா்வு எற்படுத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com