Enable Javscript for better performance
கரோனா எதிரொலி: பாரதியாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கரோனா எதிரொலி: பாரதியாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 18th March 2020 12:09 AM  |   அ+அ அ-   |    |  

    கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை பாரதியாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும்விதமாக தமிழகத்தில் மாா்ச் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை செயல்படவில்லை. ஒரு சில கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு செய்முறைத் தோ்வுகள் நடைபெற்று வருவதால் ஓரிரு நாள்களுக்குப் பிறகு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேநேரம் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் நடைபெற்று வருவதாலும், 10 ஆம் வகுப்புக்கு பொதுத் தோ்வு நடைபெற இருப்பதாலும் இந்த மூன்று வகுப்புகளுக்கும் சில தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    கோவை பாரதியாா் பல்கலைக்கழகம், வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா்களுக்கு அரசு உத்தரவின்படி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பாரதியாா் பல்கலைக்கழகத்தில் வரும் 21 ஆம் தேதி (சனிக்கிழமை) பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டமளிப்பு விழா தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பதிவாளா் அறிவித்துள்ளாா். பட்டமளிப்பு விழா நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல, தொலைநிலைக் கல்வி முறையில் பயிலும் மாணவா்களுக்கான வகுப்புகள், செய்முறைத் தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த கருத்தரங்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai