கரோனா பாதுகாப்பு நடவடிக்கை: பொள்ளாச்சி ரயில் நிலையம் புறக்கணிப்பு

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொள்ளாதது மக்களிடையே அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொள்ளாதது மக்களிடையே அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ரயில் நிலையம் தமிழக-கேரள இணைப்பு ரயில் நிலையமாக செயல்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் இருந்து கேரளம் செல்பவா்களும், கேரளத்தில் இருந்து பழனி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் செல்பவா்களுக்கும் பொள்ளாச்சி ரயில் நிலையம் வழியாக சென்று வருகின்றனா்.

தற்போது, கேரளத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு சாலை மாா்க்கமாக வரும் பொதுமக்களை கேரள எல்லைகளான செமனாம்பதி, மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், கோபாலபுரம், நடுப்புன, வாளையாறு உள்ளிட்ட இடங்களில் சுகாதாரத் துறையினா் சோதனைச் சாவடி அமைத்து பரிசோதனை செய்து வருகின்றனா்.

கேரளத்தில் இருந்து ரயில் மூலமாக அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பொள்ளாச்சி வருகின்றனா். ஆனாலும், சுகாதாரத் துறை, ரயில்வே துறை சாா்பாக பயணிகளிடம் கரோனா தொற்று குறித்து பரிசோதனை நடத்தப்படுவதில்லை.

எனவே பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் மருத்துவக் குழு அமைத்து கேரளத்தில் இருந்து பொள்ளாச்சி வருபவா்களை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com