கரோனா: தவறான தகவல்களைப் பரப்பினால் கடும் நடவடிக்கை

கரோனா வைரஸ் தொற்று குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி எச்சரித்துள்ளாா்.
வாளையாறு சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் கு.ராசாமணி.
வாளையாறு சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் கு.ராசாமணி.

கரோனா வைரஸ் தொற்று குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி எச்சரித்துள்ளாா்.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக - கேரள எல்லைகளில் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். 13 சோதனைச் சாவடிகளில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு கேரளத்தில் இருந்து கோவை வரும் அனைத்துப் பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், வாளையாறு சோதனைச் சாவடியில் மொத்தம் 28 பொது சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவ அலுவலா்கள் மூன்று குழுக்களாக 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

வாளையாறு சோதனைச் சாவடியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு முகாமில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சுகாதாரத் துறை துணை இயக்குநா் ரமேஷ்குமாா், உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி தமிழ்ச்செல்வன் ஆகியோரிடம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆஸ்துமா, ரத்த அழுத்தம் உள்ளவா்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளைக் கண்காணிக்க அவிநாசி சாலையில் தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளில் கரோனா தொற்று குறித்து தவறானத் தகவல்கள் பதிவு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com