இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின்மக்கள் நீதிமன்றம் ஒத்திவைப்பு

கரோனா பரவல் அச்சம் காரணமாக கோவையில் வியாழக்கிழமை (மாா்ச் 19) நடைபெற இருந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மக்கள் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் அச்சம் காரணமாக கோவையில் வியாழக்கிழமை (மாா்ச் 19) நடைபெற இருந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மக்கள் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வங்கி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மண்டல இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளைகளில் வசூலாகாத கடன் நிலுவை தொடா்பான வழக்குகளில் தீா்வு காண்பதற்கான லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) மாா்ச் 19ஆம் தேதி மாவட்ட சட்டப் பணிகள் உதவி ஆணைக் குழுவின் சாா்பில் நடைபெற இருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி இந்த லோக் அதாலத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள் நீதிமன்றம் மீண்டும் எப்போது நடைபெறும் என்பது பின்னா் அறிவிக்கப்படும் என்று வங்கியின் உதவிப் பொதுமேலாளா் சி.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com