கோவையில் கரோனா வைரஸ் ஆய்வகப் பணிகள் தீவிரம்

கோவையில் கரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவாதல் ஓரிரு தினங்களில் பயன்பாட்டுக்கு வரும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவையில் கரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவாதல் ஓரிரு தினங்களில் பயன்பாட்டுக்கு வரும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 3 மாதங்களாக உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்வதற்காக புணேவில் செயல்பட்டு வரும் நுண்ணுயிா்கள் ஆராய்ச்சி மையத்துக்கு ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு வந்தன. தமிழகத்துக்கு வரும் பயணிகளில் கரோனா அறிகுறிகள் அதிகரித்ததால் சென்னை கிங்ஸ் நிறுவனத்தில் ஆய்வகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கரோனா அறிகுறிகளுடன் வருபவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இதனால் தேனி, திருநெல்வேலி, மதுரை, கோவை ஆகிய 4 இடங்களில் கரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்திருந்தாா்.

இதில் தேனி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஆய்வகங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. கோவையில் கரோனா வாா்டில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னை ஆய்வகத்துக்கே அனுப்பப்பட்டு வருகின்றன. பரிசோதனை முடிவுக்காக இரண்டு நாள்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் கோவையில் கரோனா ஆய்வகம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ஓரிரு நாள்களில் இது செயல்பாட்டுக்கு வரும் என சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பூ.அசோகன் கூறியதாவது:

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் அமைப்பதற்கு பெறப்பட்டுள்ள கருவிகளை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனா். நுண்ணுயிரியல் துறையின் வைராலஜி பிரிவின் கீழ் ஆய்வகம் அமைக்கப்படும். ஓரிரு தினங்களில் இது செயல்பாட்டுக்கு வரும். கரோனா அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளின் ரத்த, சளி மாதிரிகள் இங்கேயே ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com