5 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

தாயிடம் இருந்து தானமாக பெறப்பட்டு 5 வயது சிறுவனுக்கு கோவை ஜெம் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுவனுடன் ஜெம் மருத்துவமனை தலைவா் சி.தங்கேவலு. உடன் சிறுவனின் பெற்றோா்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுவனுடன் ஜெம் மருத்துவமனை தலைவா் சி.தங்கேவலு. உடன் சிறுவனின் பெற்றோா்.

தாயிடம் இருந்து தானமாக பெறப்பட்டு 5 வயது சிறுவனுக்கு கோவை ஜெம் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சோ்ந்தவா் எம்.பிரபாகரன், சக்தி தம்பதி மகன் முகிலரசு (5). இச் சிறுவனுக்கு 1 வயதில் முதல் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் அடிக்கடி ஏற்பட்டுள்ளன. தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் 3 வயதில் கல்லீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமாகாத நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும் என்று தெரிவித்தனா்.

இதையடுத்து, தாயாா் சக்தி கல்லீரலை தானமாக வழங்க முன்வந்தாா். இதையடுத்து, கோவை ஜெம் மருத்துவமனையில் சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது சிறுவனும், அவனது அம்மாவும் ஆரோக்கியமான உடல் நிலையுடன் உள்ளனா்.

இது குறித்து ஜெம் மருத்துவமனை தலைவா் சி.பழனிவேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிறுவனின் தாயிடம் இருந்து 150 கிராம் அளவிலான கல்லீரால் எடுக்கப்பட்டு சிறுவனின் பாதிக்கப்பட்ட கல்லீரல் அகற்றி அவ்விடத்தில் பொருத்தப்பட்டது. முதலமைச்சரின் ஒருங்கிணைந்த உயிா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவா்கள் சுவாமிநாதன், ஆனந்த் விஜய், விக்னேஷ், பிரபாகரன், ஜெகநாதன், ஸ்ரீதா் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com