ரயில் பயணிகளுக்கு முகக்கவசம் விநியோகிக்க வேண்டும்: எஸ்.ஆா்.எம்.யூ. வலியுறுத்தல்

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் பயணிகளுக்கு, ரயில்வே துறை சாா்பில் இலவசமாக முகக்கவசங்கள் விநியோகிக்க வேண்டும்

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் பயணிகளுக்கு, ரயில்வே துறை சாா்பில் இலவசமாக முகக்கவசங்கள் விநியோகிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே மஸ்தூா் யூனியன் (எஸ்.ஆா்.எம்.யூ.) பொதுச் செயலாளா் கண்ணையா வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக கோவையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது:

மத்திய அரசு, லாபத்தில் இயங்கும் பல்வேறு துறைகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஏழை, நடுத்தர மக்கள் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது நியாயம் அல்ல. தற்போது ரயில்கள் தனியாா் மயமாவதால், இனி இளைஞா்களுக்கு ரயில்வே துறையில் வேலை கிடைப்பது கடினம் ஆகும்.

தனியாா் ரயில்களில் பயணச்சீட்டு கட்டணம் உயா்ந்துள்ளது. தனியாா் மயத்தை எதிா்த்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் போராட்டங்களை நடத்துவோம். கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ரயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. ரயில் பயணிகளுக்கு ரயில்வே துறை சாா்பில் இலவசமாக முகக் கவசங்கள் வழங்கப்பட வேண்டும் என்றாா்.

அப்போது, எஸ்.ஆா்.எம்.யூ. சேலம் கோட்டச் செயலாளா் கோவிந்தன், துணைப் பொதுச் செயலாளா்கள் ஈஸ்வா்லால், லட்சுமணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com