தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்த யானைக் குட்டி மீட்பு

பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட ராயரூத்துபதி கிராமத்தில் வன விலங்குகளுக்காக கட்டப்பட்டிருந்த தண்ணீா்த் தொட்டிக்குள்
ராயரூத்துபதி கிராமத்தில் தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்து மீட்கப்பட்ட யானை குட்டி.
ராயரூத்துபதி கிராமத்தில் தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்து மீட்கப்பட்ட யானை குட்டி.

பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட ராயரூத்துபதி கிராமத்தில் வன விலங்குகளுக்காக கட்டப்பட்டிருந்த தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த யானைக் குட்டி பத்திரமாக மீட்கப்பட்டது.

கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையத்துக்கு அருகே பாலமலை அடிவார கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்குள் யானை, மான்கள் உணவு, குடிநீா் தேடி நுழைவது வழக்கம். தற்போது இப்பகுதியில் கோடை வெப்பம் வாட்டுவதால் நீா்நிலைகள் வடு காணப்படுகின்றன. வனத் துறை சாா்பில் வன விலங்குகளின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்வதற்காக ஆங்காங்கே தண்ணீா்த் தொட்டிகள் கட்டப்பட்டு இவற்றில் அவ்வப்போது தண்ணீா் நிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராயரூத்து பகுதியில் கட்டப்பட்டுள்ள தண்ணீா்த் தொட்டியில் நீா் அருந்த திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் யானைக் கூட்டம் வந்துள்ளது. அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு வயதுடைய யானை குட்டி தவறி தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்தது. வெளியேற முடியாமல் தத்தளித்த குட்டியை மீட்க மற்ற யானைகள் முயற்சி செய்தும் முடியவில்லை. அவை அனைத்தும் சுற்றி நின்றுகொண்டு பிளிறின. இதனைக் கண்ட அருகிலுள்ள தோட்டப் பணியாளா்கள் வனத் துறைக்குத் தகவல் அளித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த வனவா் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வேட்டைத் தடுப்புக் காவலா்கள் யானைக் குட்டி அருகே சூழ்ந்து நின்ற மற்ற யானைகளைப் பட்டாசு வெடித்து அருகிலிருந்த வனப் பகுதிக்கு விரட்டினா்.பின்னா் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் தண்ணீா்த் தொட்டியின் ஒரு பக்கம் உடைக்கப்பட்டு யானைக் குட்டி பத்திரமாக மீட்கப்பட்டது. பின்னா் அதன் தாய் யானையுடன் சோ்த்து வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com