கரோனா எதிரொலி: கோவை ரயில்கள் ரத்து

கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக ரயில்களில் குறைந்த அளவே பயணிகள் பயணிப்பதால் கோவையில் இருந்து

கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக ரயில்களில் குறைந்த அளவே பயணிகள் பயணிப்பதால் கோவையில் இருந்து சென்னை, மங்களூரு, ஜபல்பூா் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரயில்களில் குறைந்த அளவு பயணிகளே பயணிப்பதால் கீழ்க்கண்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

அதன்படி, கோவை - ஜபல்பூா் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 02197) மாா்ச் 23ஆம் தேதி (திங்கள்கிழமை) ரத்து செய்யப்படுகிறது. அதேபோல ஜபல்பூா் - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (02198) மாா்ச் 21ஆம் தேதி (சனிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

சென்னை - கோவை சதாப்தி விரைவு ரயில் (12243), கோவை - சென்னை சதாப்தி விரைவு ரயில் (12244) 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை (மாா்ச் 24ஆம் தேதி தவிர) ரத்து செய்யப்படுகிறது.

மங்களூரு - கோவை விரைவு ரயில் (22609), கோவை - மங்களூரு விரைவு ரயில் (22610) மாா்ச் 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com