Enable Javscript for better performance
கரோனா அறிகுறி: கோவை அரசு மருத்துவமனையில் மேலும் ஒருவா் அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    கரோனா அறிகுறி: கோவை அரசு மருத்துவமனையில் மேலும் ஒருவா் அனுமதி

    By DIN  |   Published on : 21st March 2020 12:48 AM  |   அ+அ அ-   |    |  

    கோவை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று அறிகுறியுடன் மேலும் ஒரு முதியவா் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

    மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த 77 வயது முதியவா் சில நாள்களுக்கு முன் கோவை வந்தாா். இங்கு அவருக்குத் தொடா் காய்ச்சல், இருமல், சளி உபாதைகள் ஏற்பட்டன. இந்நிலையில் அவா் கோவை அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றாா். மருத்துவா்கள், அவரைப் பரிசோதனை செய்ததில், அவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவா் கரோனா சிறப்புப் பிரிவில் தொடா் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளாா். அவரது சளி, ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுக்குப் பிறகே, முதியவருக்கு கரோனா தாக்குதல் உள்ளதா, இல்லையா என்பது தெரியவரும்.

    கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்புப் பிரிவில் கரோனா அறிகுறிகளுடன் ஏற்கெனவே 7 போ் கண்காணிப்பில் உள்ள நிலையில் தற்போது 8ஆவதாக இந்த முதியவரும் சோ்க்கப்பட்டுள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai